தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வேப்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை – திருச்சி செல்லும்… வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சாலையின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலையில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு. தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் காவலர்கள்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும்… அதாவது, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, சேலம் – கடலூர் தேசிய நெடுஞ்சாலையும் இணையும் மிக முக்கியமான வழிதடமாக… நாள்தோறும் இரவும் பகலமாக எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வேப்பூர் பேருந்து நிலையத்திற்கு முன்புற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக… தற்போது, திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும்… சர்வீஸ் சாலையில் பயணிக்கக் கூடிய சூழ்நிலையில்,
வருகிற திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி… , திருச்சி, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊருக்கு பேருந்து மற்றும் கார்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ,வேப்பூர் கூட்ரோடு வழியாக திருச்சி மார்க்கமாக, செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் வருவதால்.,
தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்தின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்கின்றன நிலை ஏற்பட்டுள்ளது .
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தும் விதமாகவும், போக்குவரத்து பாதிப்பை சீர்படுத்தி சரி செய்யும் வகையில் வேப்பூர் காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணி காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலம் அமைக்கும் பணியை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.