BREAKING NEWS

தீஸ்தா செதல்வாட் – டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் .

தீஸ்தா செதல்வாட் – டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம்   தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் .

குஜராத் படுகொலைக்கு நீதிகேட்டு வழக்கு நடத்திய தீஸ்தா செதல்வாட் – டி.ஜி.பி சிறீகுமார் ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும்!மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது!

கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கான நீதி வேண்டி சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் தீஸ்தா செகல்வாட், குஜராத்தில் முன்னாள் காவல்துறை துணைத் தலைவர் ஸ்ரீகுமார், மற்றும் காவல்துறை உயர் அதிகாரி சஞ்சீவ்பட் உள்ளிட்டோர் அப்போதைய குஜராத் முதல்வர், இன்றையபிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார்.

அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் தொடர்ச்சியாக இவர்கள் மீது பழிவாங்கும் பொருட்டு ஒன்றிய பிஜேபி அரசாங்கம் அவர்கள் மீது கைது செய்யும் நடவடிக்கைகளை எடுத்தது. இதில் சஞ்சய் பட்டு உள்ளிட்டோர் சிறைச்சாலையில் உள்ளனர் .இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் சார்பில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மாலை 6மணிக்கு தஞ்சை ரயிலடி முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்டச் செயலாளர் தேவா தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை .பாண்டியன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனி ராஜன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் இணை பொதுச் செயலாளர் இராவணன், மாவட்ட நிர்வாகி தஞ்சை சாம்பான், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் எம்.பி.நாத்திகன், குடந்தை மண்டல மக்கள் அதிகார பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் கண்டன உரையாற்றினர். நிறைவுறையாக பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலாளர் காவிரிநாடன் ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் என்.சீனிவாசன், என்.பாலசுப்பிர மணியன்,ஆர். பிரபாகர், ஆர். பி.முத்துக்குமரன், எம்.வடிவேலன், என்.குருசாமி ,சரவணன், கரிகாலன் , சித்திரக்குடி விவசாய சங்க நிர்வாகி டி.சீனிவாசன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருள் நன்றி கூறினார். 2022 குஜராத் படுகொலை நீதிக்காக போராடிய தீஸ்தாசெகல்வாட், டி.ஜி.பி குமார் ,காவல் துறை உயரதிகாரி சஞ்சய் பட்கைது, காவி பாசிசத்தின் பிடியில் நீதித்துறை , விடுதலை செய், விடுதலை செய் கைது செய்யப்பட்ட மனித உரிமை போராளிகளை விடுதலை செய் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டது. செய்தி::: துரை.மதிவாணன்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )