BREAKING NEWS

துபாய் சென்ற எம்.எல்.ஏ. மாரடைப்பில் மரணம்! அதிர்ச்சி!!

துபாய் சென்ற எம்.எல்.ஏ. மாரடைப்பில் மரணம்! அதிர்ச்சி!!

சிவசேனா கட்சி தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே உள்ளார்.

இந்நலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.ரமேஷ் லட்கே விடுமுறையை தனது குடும்பத்துடன் சேர்ந்து கழிக்க துபாய் சென்றுள்ளார். துரதிருஷ்டவசமாக எம்.எல்.ஏ. ரமேசுக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினருடன் கடந்த புதன்கிழமை ஷாப்பிங் சென்ற எம்.எல்.ஏ. ரமேசுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிர் பிரிந்துள்ளது.

கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் சிவசேனை கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 2002ல் நடந்த நகராட்சி தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய்க்கு சென்ற எம்.எல்.ஏ. திடீர் மாரடைப்பால் பலியான செய்தி கேட்டு சிவசேனை கட்சியினர் பெரும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் தொகுதி மக்கள் துக்கத்தில் உள்ளனர். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )