BREAKING NEWS

தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி  தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு, லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் நெஸ்டன் மனைவி மடோனா (40), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 அண்டுளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது தாயார் ரோசிட்டா என்பவருடன் வசித்து வருகிறார். இன்று காலை 9 மணியளவில் மடோனா தனது தாயாரை அடித்து துன்புறுத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்துக் கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து அவரது தாயார் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் மடோனா சமாதானம் அடையாமல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்த போது கதவை உடைத்தால் கேஸ் பற்ற வைத்து விடுவேன் என கூறிய அப்பெண் பின்னர், தீயணைப்பு துறையினரின் சூட்சகமாக லாவகமாக தாய் – மகளை மீட்டனர். மேலும், மடோனாவை மனநல காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )