தூத்துக்குடி தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியை சேர்ந்த ஆறு பேர் பலி-தூத்துக்குடி சிலுவை பட்டியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும். ‘பசிலிக்கா’ அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம்.
அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ் (36), தாவிதுராஜ் (30), ஆகியோர் உள்பட 57 பேரை கொண்ட குழுவினர் பூண்டி மாதா பேராலயத்துக்கு ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலாவாக சென்றனர்.
இவர்கள் பூண்டி மாதா பேராலயம் அருகில் உள்ள கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். ஆற்றில் நீரோட்டம் இருந்த நிலையில் ஆற்றில் இறங்கி குளித்தவர்கள் அதன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் மற்றும் ஹெர்பல், பிரவீன்ராஜ் ஈசாக் ஆகிய ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவை பட்டி கிராமத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, ஆற்றில் மூழ்கி பலியான ஆறு பேரில் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதில் ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாவட்ட அம்மா பெற இணை செயலாளர் நீலகண்டன், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, போபி, முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ஆழமான பகுதி என்று அரசு அறிவிப்பு பலகை வைக்காமல், அறிவிக்காமல் மெத்தன போக்கோடு செயல்பட்டது தான் இந்த விபத்திற்கு காரணம், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இறந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரியூரிந்தார்.
ஆனால் தமிழக அரசு கண்துடைப்புக்காக 3 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும். கல்வி தகுதி இல்லாதவர்களுக்கு கடனுதவி அளித்து தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும்.
மேலும், இந்த அரசு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள எதையும் செய்யாமல் ஆற்றுப்படுகையுள் மணல் அள்ளுவதையும், மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆற்று படுக்கையில் விதிகளுக்கு மீறி மணல் அல்லபடுவதை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்று பார்த்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகதாக கூறினார்.