BREAKING NEWS

தென்காசியில் கேரள மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

தென்காசியில் கேரள மருத்துவர்களைக் கொண்டு பல்வேறு நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

கேரளாவில் 70 வருட பாராமபரியமிக்க கே. எம். கே. ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் தென்காசி மர்ஹூம் அப்துல் ரஹ்மான் குடும்பம் இணைந்து ஹமீதிய்யா நடுநிலைப்பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தினர். முகாமிற்கு மும்தாஜ் அலி தலைமை தாங்கினார். காவல் காதர் மைதீன் முகாமினை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாழர்களாக தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ,நகர் மன்ற தலைவர் சாதிர்,மஸ்ஜிதுல் முபாரக் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் கபூர், எஸ் டிபி ஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் மருத்துவர்கள் மைதீன் குஞ்சு லெப்பை,முஹம்மது சுஹைல், தவ்சிப் முஹம்மது ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

முகாமில் கீல்வாதம் மூட்டு நோய்கள் மூச்சுத்திணறல் ஒவ்வாமை தோல் நோய் போன்ற நோய்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமூக ஆர்வலர் அஹமதுஷா சிறப்பாக செய்திருந்தார்.முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் . முகாம் தன்னார்வலர் சுபைர் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )