தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி,எஸ்டி, அலுவலர் நலசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி, அலுவலர் நல சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த 15 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
தென்காசியில் தமிழ்நாடு அரசு எஸ்சி,எஸ்டி, அலுவலர் நலசங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண அரங்கில் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமையில் மாநில பொதுச்செயலாளர் திலகர் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றிட அரசாணை பிறப்பித்தும் , பின்னடைவு பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பிட உரிய அரசாணையும் பிறப்பித்த தமிழக முதல்வர்க்கு நன்றி தெரிவித்தும்
சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திடவும் சாதிமறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் தமிழக அரசு சட்டம் இயற்றி வலியுத்தித்திடவும்
கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை தூய்மை பணியாளர்களுக்கும் தமிழக முதல்வர் அறிவித்த ஊக்க நிதி தலா ரூ 15,000 ஆயித்தை உடனடியாக வழங்கிட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் வருவாய்துறை, நகராட்சி துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
