BREAKING NEWS

தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி.

தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி.

தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் மக்கள் பங்களிப்புடன் கூடிய நகரத் தூய்மைக்கான திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் காசிவிசுவநாதர் ஆலயம் முன்பு நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகர தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து மாணவிகள்,பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நெகிழி இல்லா நகரத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )