தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் குற்றாலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது ஹரிஹரன், சாகுல் ஹமீது, மாநில துணைத்தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாவட்ட தலைவர் குலாம், தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் வரவேற்புரையாற்றினார்.
தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுசி சுந்தர் தொடக்க உரையாற்றினார். காணொளி காட்சி மூலமாக மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா சிறப்புரையாற்றினார்.
இதனை முன்னிட்டு உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்த்தல் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், கிருஷ்ணன், பால் நேரு, மகாதேவன், ஆர்.எஸ்.முருகன், குருசாமி, கெய்சர் அலி, பாக்கியம் அம்மாள்,
திருமலை குமார், தங்கராஜ், தமிழரசன், சண்முகசுந்தரம், அழகப்பன், தேவ் வெங்கடேஷ், தொகுதி செயலாளர்கள் பால் நேரு (எ) கண்ணன், ராஜேந்திரன், சங்கரநாராயணன், சண்முகையா பாண்டியன், நகரச் செயலாளர்கள் சங்கரநாராயணன், கருப்பசாமி, அபு அன்னாவி, சங்கர், முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சண்முகசுந்தரம், கருப்பசாமி, முத்துக்குமார், வினோத், சுரேஷ், தங்கராஜ், மாரியப்பன், முத்துசாமி, சிவன் ராஜ், கணேச பாண்டியன், ராஜா ராம் துரை, ரவி (எ) ராமையா, சாமுவேல், சக்தி குமார், கருத்த பாண்டியன், டென்சிங் சுவாமி தாஸ் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகரத் தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.