BREAKING NEWS

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் திருவிழா

தென்காசி மாவட்டம்  கடையநல்லூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு கட்டுபாட்டில் உள்ள அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில்  திருவிழா

ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிர்ம உற்சவ திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதற்கான திருவிழா கடந்த 1-ம் தேதி துவங்கிய நிலையில் விழாவின் 9-வது நாளான இன்று மாலையில் தேர் நிலையத்தில் இருந்து புறப்ப நிலையில் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது மரக்கிளைகள் தேர் செல்வதற்கு இடையூறாக இருந்தது.

இந்நிலையில் தேரை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்து விட்டு இடையுறாக இருந்த மரக்கிளைகளை தீயணைப்புத்துறை பணியாளர்கள் உதவியுடன் மரக்களை அகற்றினர். இதனால் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இந்து அறநிலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் முன்னச்சரிக்கையாக இடையூராக இருக்கும் மரக்கிளைகளை வெட்டி அப்புறபடுத்த தவறியதால் இந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )