BREAKING NEWS

தேனியில் நாம் தமிழர் கட்சியினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனியில் நாம் தமிழர் கட்சியினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனி, தேனி – மதுரை நெடுஞ்சாலையில், பங்களா மேடுத் திடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி – கம்பம் நெடுஞ்சாலையில், உப்பார்பட்டி விலக்கில்,

 

 

புதிதாக சுங்கச்சாவடி(டோல்கேட் ) திறப்பதை தடுத்து நிறுத்திடக் கோரி, நாம் தமிழர் கட்சியின், தேனி மாவட்டச் செயலாளர் அ.செயக்குமார் தலைமையில்,, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,

 

 

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, தேனி – கம்பம் நெடுஞ்சாலையில் உப்பார் பட்டி விலக்கில், புதிதாக சுங்கச்சாவடி திறப்பதை தடைசெய்யக்கோரி,கண்டன முழக்கங்களையும், கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )