தேனி அருகே கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு;, மனைவிக்கு சரமாரியாக கத்தி குத்து.

தேனி மாவட்டம் செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்டது சில்லமரத்து பட்டி கிராமம். இங்கு தாத்தப்ப சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கற்பகம்(35), இவரது கணவர் ரங்கநாதன்(40), ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த நான்கு ஆண்டு காலமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் ரங்கநாதன் அடிக்கடி கற்பகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சில்லமரத்துப்பட்டியில் கற்பகம் பெயரில் வீடு மற்றும் தோட்டமும் உள்ளதாகவும் தெரிகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் வந்துள்ள ரங்கநாதன் சில நாட்களுக்கு முன்பு தனது பெயரில் உள்ள தோட்டத்தை விற்றதுடன் கற்பகம் பெயரில் உள்ள சொத்துக்களையும் தனது பெயரில் மாற்றித் தரும்படி கூறியும் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார் .
இன்று மதியம் கற்பகம் வீட்டிற்கு வந்த ரங்கநாதன் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த ரங்கநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கற்பகத்தின் கழுத்தில் நான்கு ஐந்து முறை சரமாரியாக குத்தியதால் சம்பவ இடத்திலேயே கற்பகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்தியால் குத்தப்பட்ட கற்பகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் புறம்பாக காவல்துறையிடம் கொலைக்கான காரணத்தை ராணுவ வீரர் ரங்கநாதன் கூறியதால்,
போடி டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
