தேனி அருகே கர்நாடகா லாரி கேரளா கார் நேருக்கு நேர் மோதி விபத்து. காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் கவலைக்கிடம்.

கர்நாடகாவைச் சேர்ந்த லாரி கோவையில் இருந்து பேவர் ப்ளாக் கற்களை ஏற்றிக்கொண்டு கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த தேனி மதுராபுரி பகுதியில் செல்லும் புதிய புறவழிச்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த போது கேரளாவில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக உருகுலைந்தது.
இதில் காரில் வந்த மூன்று ஆண்களில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் காரில் பயணித்த ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் கேரளா மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் காரில் பயணம் செய்த மூவரில் ஒருவர் ஆணந்த் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான இருவர் சடலங்களை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் எடுக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை வைத்து உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்தேனி சதீஸ், முத்துராஜ்.
