தேனி பழனிசெட்டிபட்டியில் நவராத்திரி இறுதி நாளை முன்னிட்டு ஸ்ரீ மதுராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் ஸ்ரீ மது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை காட்டபட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இன்று நவராத்திரி தினத்தின் இறுதி நாளை முன்னிட்டு மாலை பொழுதில் ஸ்ரீமது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் சன்னதியில் இருந்து தேரில் எழுந்தருளி பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து பின்னர் மீண்டும் சன்னதிக்கு வந்தார்.
இந்த ஊர்வலம் நிகழ்ச்சி கோவில் நிர்வாக தலைவர் வெள்ளைச்சாமி தலைமையிலும் கோவில் நிர்வாக செயலாளர் கணேஷ் பாபு முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த வீதி ஊர்வல நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஸ்ரீ மது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அருள் பெற்றனர்.