BREAKING NEWS

தேனி பேருந்து நிலைய வளாகத்தில் 9 லட்சம் மதிப்பீட்டில் 20 மீட்டர் உயரத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா

தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2021-2022) ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் 20 மீட்டர் உயரத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா.

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2021-2022) ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் 20 மீட்டர் உயரத்தில் உயர்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவர்களது ஆலோசனைப்படி நடைபெற்ற இவ் விழாவில் பெரியகுளம் நகர கழக செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல் சமது, பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினரும், அஇஅதிமுக பெரியகுளம் நகர் மன்ற குழு தலைவருமான ஓசண்முகசுந்தரம்,இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )