தேனி, போடிநாயக்கனூரில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற நபரை கட்டி வைத்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த கமலம் (72) என்ற மூதாட்டி போடிநாயக்கனூருக்கு அவரது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் வந்துள்ளார்.
அப்பொழுது அதே பேருந்தில் பயணம் செய்த ஒரு நபர் போடிநாயக்கனூர் போஜன் பார்க் பேருந்து நிறுத்தம் வந்த பொழுது, மூதாட்டி கமலம் பேருந்தில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த அந்த நபர் மூதாட்டியிடம் இருந்து செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்து பின்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில்: செயின் பறிக்க முயன்ற நபர் தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (38) என்பது மூதாட்டியிடம் பேருந்தில் ஒன்றாக பயணம் செய்து அவரின் செயினை பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ள போடிநாயக்கனூர் நகர் காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.