BREAKING NEWS

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவனை கத்தியால் குத்திய மர்ம கும்பல்!!

தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவனை கத்தியால் குத்திய மர்ம கும்பல்!!

கொலை

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மார்ச் 15-ம் தேதி திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கார்த்திக் (20) என்ற வாலிபரை கேலி கிண்டல் செய்ததால், மாணவன் கத்தியால் வெட்டியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, வெட்டுப்பட்ட கார்த்திக் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். பின்னர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் போலீசார் 12-ம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு அவரை கைது செய்து அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக நீதிமன்ற அனுமதியோடு பரோலில் வெளியே வந்தார். ராயப்பேட்டை வி.எம் தெருவில் உள்ள கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவன் இன்று தேர்வு எழுதிவிட்டு தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் மாணவனை கத்தியால், வலது பக்க கழுத்தில் குத்தியதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ரத்தக் காயத்துடன் கிடந்த மகனை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் 5 பேர் தான் கத்தியால் குத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பி ஓடிய கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )