BREAKING NEWS

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பாரிவேந்தர் மீண்டும் வெற்றி பெற ஐஜேகே கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே கட்சியின் சார்பில் டாக்டர்பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளிலும் வேட்பாளர் பாரிவேந்தர் ஐஜேகே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியுடன் தீவிர பிரச்சாரம் செய்தார்.

இந்நிலையில் நேற்றுடன் தேர்தல் ஆணைய உத்தரவின் படி அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதையடுத்து இன்று பிரசித்தி பெற்ற தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் ஐஜேகே கட்சியின் மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் ஐஜேகே மாவட்ட அமைப்பு செயலாளர் சிவா, பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ஐடி விங் மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, மீனவர் அணி ஒன்றிய செயலாளர் மாரியப்பன் ஓட்டுநரணி ஒன்றிய செயலாளர் ராமசாமி, இளைஞரணி ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஐஜேகே உறுப்பினர் சக்கரவர்த்தி, பாமக பொறுப்பாளர் சுப்ரமணி தொட்டியம்

மதுரை காளியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்தனர். முன்னதாக பெரம்பலூர் மக்களவை தேர்தலில் டாக்டர் பாரிவேந்தர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு வழிபாடுகள் நடத்தி பிரார்த்தனை செய்தனர்.

 

CATEGORIES
TAGS