த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி செய்யாறில் மகளிர் அணி அமைப்பினர் அன்னதானம் வழங்கி அசத்தல்

தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளையொட்டி, செய்யாறில் மகளிர் அமைப்புச் சேர்ந்த பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், பொதுமக்களுக்கு அன்னதான வழங்கி மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பெருவாரியான இடங்களை பிடித்து ஆட்சியை அமைத்தது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்று புதிய சாதனையை படைத்தார். ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி அழகு பார்த்து வருகிறார் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்.
த.வெ.க.,விற்கு வாக்களித்த இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பார்த்த அளவுக்கு முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் செய்யாறில் த.வெ.க.,வின் மாவட்ட மகளிர் அணியின் இணை அமைப்பாளரும்,வழக்கறிஞருமான ஆனந்தி ஏற்பாட்டில் இங்குள்ள இந்திரா காந்தி சிலை அருகே, பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு முட்டையுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆரூண், நிர்வாகிகளான பொன்வேலி வாஞ்சிநாதன் , பிரதாப், சதீஷ், கிழக்கு மாவட்ட இளம்பெண்கள் அணி துணை அமைப்பாளர்களான எஸ்.சுபஸ்டி, அமுதா, பிரீத்தி மற்றும் நகர, வட்ட, கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
