நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்.
நரிக்குறவ மக்களுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அரசு அளித்த 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்.

எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடிய நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் டிஜிபி அலுவலகம் வந்தனர். அவர்கள், 5 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் ஒன்றை அளித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஸ்ரீதர், “முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தில் “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க” என்ற பாடலில் நடித்த நரிக்குறவர்கள் சமூகத்தை சேர்ந்த பாயம்மா, லட்சுமி மற்றும் ஆப்பிள் ஆகியோருக்காக இலவசமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.
CATEGORIES திருவள்ளூர்