நாளை பொதுக்குழு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே ஆலோசனை!.

அதிமுக பொதுக்குழு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அதை நடத்தலாமா கூடாதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு மீது நாளை காலை 9 மணிக்குத்தான் விசாரணை நடைபெற உள்ளது. இப்படியான சூழலில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் இன்றே சென்னையில் முகாமிட்டுள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவருகின்றனர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
