நாளை மறுநாள் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!
நாளை மறுநாள் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!
நாளை மறு தினம் மே 24ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசடத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதையடுத்து விவசாயிகள் குறுவை, சம்பா ஆகிய பருவங்களில் சாகுபடி மேற்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து, ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் இருந்தால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது என்பது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், நேற்று காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 120 அடியாகும். அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் தற்போது 115 அடியாக உயர்ந்திருக்கிறது. நீர்வரத்து இதே நிலையில் தொடர்ந்தால் அடுத்த இரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு உழவர்கள் ஆயத்தமாகி விட்டதால், ஜூன் 12-ம் தேதி வரை காத்திருக்காமல் மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க வேண்டும் என்று பாமக மற்றும் விவசாயிகள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நாளை மறுதினம் மே 24ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.