BREAKING NEWS

நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நிலக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோட்டில் அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையிலும், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் முன்னிலையிலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால அ.தி.மு. க.கழகத்தின் பொதுச்செயலாளராக பதவியேற்றதையும், கழகத் துணை பொதுச் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பதவியேற்றதையும், கழக பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவியேற்றதையும் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி,நகரச் செயலாளர்கள் தண்டபாணி,சேகர், மாவட்ட துணைச் செயலாளர் டி.ஆர். விஜயபாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, நகர பொருளாளர் பூக்கடை சரவணன், ஒன்றிய பொறுப்பாளர்கள் பந்தா முருகன், ஸ்ரீனிவாசன், மற்றும் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )