BREAKING NEWS

நிலக்கோட்டையில் பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

நிலக்கோட்டையில் பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா

 

திண்டுக்கல் நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக புகையில்லா விழா கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாசினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயலாளர். சுந்தரி, பேரூராட்சி ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர்.

 

விழிப்புணர்வு முகாமில் நிலக்கோட்டை இ.பி. காலணி, பெருமாள் கோவில், அணைப்பட்டி ரோடு சாந்தி மாணவர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு பழைய பொருட்களை எரிப்பது பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் எரிப்பது தவிர்க்க வேண்டுதல், பொது இடங்களில் பழைய பொருட்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் இருப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ஜோசப், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS