நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்காவிட்டால் பேரழிவுகளை தவிர்க்க முடியாது என்றும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடந்தது. வனத்துறை தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சையது முஸமில் அப்பாஸ் வரவேற்றார். வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேசும்போது, “வனத்துறை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு பயனளிக்கும். தமிழகத்தில் தற்போது வனப்பரப்பு 23.7 சதவீதமாக உள்ளது. வரும் 10 ஆண்டுகளில் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாறுபாட்டை கண்டறியும் வகையில் அண்ணா பல்லைக்கழகத்தில் காலநிலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதுமலை உட்பட 3 வன விலங்குகள் மீட்பு மற்றும் மறு வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது” என்றார்.

