BREAKING NEWS

நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயர்வு அடையலாம்.

நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க்கையில் உயர்வு அடையலாம்.

நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தர்ராஜன் மாணவர்களுக்கு அறிவுரை.

உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பருத்தி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் தமிழக கவர்னர் ரவி கடந்த வாரம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வழங்கினார். முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு நூலகத்தில் பாராட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு உடுமலை கிளை நுாலகம் எண் 2 நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்பி ஐயப்பன் கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் கே பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முனைவர் விஜயலட்சுமி வரவேற்று பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் ப.அருணாசலம். முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


ஏற்புரை ஆற்றிய முனைவர் பட்டம் பெற்ற சுந்தரராஜன் கூறும்பொழுது நூலகத்தை பயன்படுத்தியதால் என்னால் இந்த அளவு உயர முடிந்தது. எனது ஆராய்ச்சிக்கு பல்வேறு வகையில் இந்த நூலக நூலகம் மற்றும் நூலகர்கள் உதவி செய்தனர் மாணவர்கள் நூலகத்தை அதிக அளவு பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். எனக் கூறினார்.

மேலும் ஏழை விவசாயி மகன் ஆனா எனக்கு பொருளாதார வசதி இல்லாததால் அரசு பள்ளிகளிலேயே படித்து அரசு கல்லூரியில் எனது மேற்படிப்பைத் தொடர்ந்து மேலும் புத்தகங்கள் படிப்பதற்காக நூலகத்தை பயன்படுத்தினேன் இந்த நூலகம் எனது வளர்ச்சியில் இன்றுவரை முக்கிய அங்கமாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )