நெல்லையில் விவசாயி ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து தமிழ்நாடு யாதவ மகா சபையினர்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த மாயாண்டி விவசாயி அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது நேற்று படுகொலை செய்யப்பட்டார் .
இவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு யாதவ் மகா சபையின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை தலைமையில் மாயாண்டி குடும்பத்தினரும் உறவினர்களும் கூடினர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை பிரேத பரிசோதனை மையத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவளுடன் நெல்லை மாநகர மேற்கு காவல் துறை துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவில் பூசாரி சிதம்பரம் படுகொலை செய்யப்பட்டார் அப்போது உடலை வாங்க மறுத்து நாங்கள் போராட்டம் நடத்திய போது உடலை வாங்கினால் உடனடியாக அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் நிவாரண உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை அதற்கான உத்தரவை பிறப்பிக்காதே கண்டித்தும் மாயாண்டிய கொலை செய்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் அவரது குடும்பத்திற்கு நிவார உதவி வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்று வரை உடலை வாங்கப் போவதில்லை என உறுதி அளித்தனர்
இது குறித்து தமிழ்நாடு யாதவ மகாசபையின் இளைஞரணி பொதுச் செயலாளர் பொட்டல் துரை. கூறும்போது நாங்கள் இங்கு எதற்காக சாய்கிறோம் என்று தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறோம் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,
தொடர்ந்து சீவலப்பேரி பகுதியில் படுகொலை என்பது நடைபெற்று கொண்டு வருகிறது அங்கு உளவுத்துறை என்ன செய்கிறது என்பது தான் தெரியவில்லை,
தமிழகத்தில் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய சூழ்நிலைதான் தற்போது நிலையை கொண்டு வருகிறது தமிழக முதலமைச்சருக்கு எங்கள் சமுதாய மக்களை பற்றி கவலை இல்லையா நாங்கள் ஓட்டு போட்டதால் தான் அவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார் ஆகவே நாங்கள் மாயாண்டி உடலை வாங்கப் போவதில்லை காவல்துறை வேண்டுமானால் அந்த உடலை அடக்கம் செய்து கொள்ளலாம் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பாளையங்கோட்டை அழகுமுத்துக்கோன் சிலை முன்பு ஒரு லட்சம் யாதவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.