நெல்லை பணகுடி அருகே விவசாய தோட்டத்தில் 7-அடி நீளமுள்ள நல்ல பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
செய்தியாளர் மணிகண்டன்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாம்பன்குளம் ஊரைச் சார்ந்த மகேஷ் என்பவர் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று விவசாயிகளை அச்சுறுத்தி வந்தது.
இது குறித்து விவசாயிகள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து..
ஏழு அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பத்திரமாக மீட்டு பணகுடி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
CATEGORIES திருநெல்வேலி