பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்.

பட்டப் பகலில் வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துர் ரஹீம். நேற்று மாலை அவரது மனைவி பல்கிஸ் (63), மருமகள் ஷேக்கா ( 25) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் இரு சக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முககவசம் அணிந்திருந்த மூன்று பேர் திடீரென்று அப்துர் ரஹீமின் வீட்டுக்குள் புகுந்தனர்.
முன்பின் தெரியாதவர்கள் இப்படி திடீரென்று வீட்டுக்குள் புகுந்ததைக் கண்ட பல்கீஸ், அவர்களை தடுத்து நிறுத்தி, நீங்கள் யார்? சொல்லாமல் கொள்ளாமல் இப்படி வீட்டிற்குள் வருகிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார். அதற்கு நாங்கள் உங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம் என்று கூறிக்கொண்டே பல்கீஸை உள்ளே தள்ளியவாறு அவர்களும் உள்ளே நுழைந்து விட்டனர்.
