பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.

பண்ருட்டியில் தொழில் வர்த்தக சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார் கூட்டத்தில் விக்கிரவாண்டி சேத்தியாதோப்பு வரையிலான 66 கி.மீ பராமரிக்காதது குறித்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையை பணியை விரைந்து முடிக்காத நகாய் கண்டித்து வரும் 29ம்தேதி கண்டரக்கோட்டை பகுதியில் குண்டும், குழியுமாக பராமரிக்காத சாலையில் ஜல்லி கொட்டி போராட்டம் நடத்துவது. வரும் 5 ம்தேதி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்ததுவது.
இதனையடுத்தும் நகாய் பணியை துரிதப்படுத்தாவிடில் வரும் 9 ம்தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்துவது. 10 ம்தேதி லோக்சபா தேர்தலை புறக்கணிப்பு அறிவிப்பு வெளியிடுவது என முடிவு செய்தனர்.