பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு

உடுமலைப்பேட்டை தாலூக்கா மனுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 2022..2023…ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..இதற்கான ஏற்பாடுகளை பள்ளி.மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர்.

விழாவில். மேலாண்மை குழு தலைவர் புவனேஸ்வரி..ஆசிரியைகளுக்கு பூங்கொத்தும் மாணவ மாணவியர்கு இனிப்பும் வழங்கி கௌரவித்தார் ..விழாவில் அனைத்து ஆசிரியைகள் மேலாண்மை குழு உறுப்பினர்கள் . .சமுக ஆர்வலர்கள்.கிருஷ்ணசாமி நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் தலைமை ஆசிரியை கலைமணி பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்களுக்கு நன்றி கூறினார்.
CATEGORIES திருப்பூர்
