பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்!! வெளியேற வழியின்றி 150 மாணவிகள் தவிப்பு.

கர்நாடக மாநிலத்தில் கன மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளம் கரை புரண்டோடிக் கொண்டிருக்கிறது. தொடர் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹ¨ப்பள்ளி மாவட்டம் நவலகுண்டா பகுதியில் நேற்று கன மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஓடைகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. ஊரின் வெளிப்பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. எனவே பள்ளிக்கு செல்ல வேண்மென்றால் மாணவ, மாணவிகள் பிரதான ஓடையை கடந்துதான் ஆக வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை நேற்று மாலை பெய்த கனமழையின் காரணமாக காலையில் பள்ளிக்கு சென்ற 150 மாணவ-& மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர்களும் பள்ளியை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இதற்கிடையில் ஓடையில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால், பள்ளியைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.இதை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் வரையில் மாணவ-& மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலேயே இருந்தனர். இரவு 7.30 மணிக்கு பின்னர் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் டிராக்டர் மூலம் பாதுகாப்பாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு வீடுகளுக்கு திரும்பினர்.
பள்ளியை விட்டு வெளியேற முடியாமல் கனமழையில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தத்தளித்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று நினைத்திருந்த பெற்றோர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரிதவித்துப் போனார்கள். எனவே அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
