பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.

செங்கம் அருகே பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் கடுப்பன்குட்டை பகுதி இருளர் இனத்தைச் சேர்ந்த பழனி என்பவரை மீன் ஒப்பந்ததார ஊழியர்கள் அடுத்து கொன்றதாக கூறி பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவரது உடலை வாங்க மறுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறை கண்காணிப்பாளர் சின்னராஜ் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போது அவர்கள் மீன் ஒப்பந்ததாரர் கார்த்தி ஊழியர்கள் ஆலடியான் திவாகர் மற்றும் மீன் வளதுறை அதிகாரி சித்ரா உட்பட பழனி படுகொலைக்கு உறுதுணையாக இருந்த 10 நபர்களை கைது செய்யும் வரை,
பழனியின் உடலை வாங்க மறுத்து தொடர் தர்ணா போராட்டம் ஈடுபட போவதாக கூறியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.