பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் இது பற்றி ஹரிப்பிரியா குறுகையில் என்னுடைய படிப்பிற்கு உதவிய ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் பெற்றோர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
இதனை தொடர்ந்து 11ஆம் வகுப்பில் பயோ மேக்ஸ் பாடத்தை தேர்வு செய்து படித்து டாக்டராக வேண்டும் என்பதே எனது ஆசை எனவும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழ் வழியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை வழி நிர்வாகம் மற்றும் பலரும் ஏதுவாக பாராட்டினர்.