BREAKING NEWS

பவானியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பவானியில் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி சார்பில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரம் நடும் விழா சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

 

 

பவானி நகராட்சி ஆணையாளர் தாமரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பவானி நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் சுமார் 200 வகையான மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கப்பட்டது.

 

நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலகர்கள் சுய உதவி குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி வந்தது.

 

 

இப் பேரணியில் மக்கும் குப்பைகளை தனியாகவும், மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்து தருவது நமது பொறுப்பு கடமையாகும். என் குப்பை எனது பொறுப்பு மழை நீர் நம் உயிர் நீர் என வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் பழனிச்சாமி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார், கவுன்சிலர்களான சுப்பிரமணி, பாரதி, பாபு, ரவி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )