பவானியில் காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மதிய உணவு வழங்கினர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அம் மாநிலத்தில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து சேலம், ஈரோடு,நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் விடுக்கப்பட்டது.

பவானி நகரில் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள கந்தன் நகர் காவேரி வீதி, பசுவேஸ்வரர் வீதி, மார்க்கெட் வீதி, பாலக்கரை வீதி போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தார் அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பசுவேஸ்வரர் வீதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை மத்தியம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சி. செங்கோட்டையன், மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் யோகபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வெ. கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 150 பேருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், மாவட்ட மாணவர் அணி பொறுப்பாளர் ஸ்டிக்கர் ராஜா, நகர செயலாளர் பரணிதரன், நகர தலைவர் பிரகாஷ், முன்னாள் நகரத் தலைவர் கார்த்தி, மாணவர் சங்கப் பொறுப்பாளர் பிரபாகரன்.
