BREAKING NEWS

பவானியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் .

பவானியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் .

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி புதன் கிழமை அன்று பவானி வட்டாரத்தில் உள்வட்ட வாரியாக பவானி, கவுந்தப்பாடி, குறிச்சி போன்ற இடங்களில் சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.

 

 

பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், சான்றுகள், குடிநீர் வசதி, சாலை வசதி, மருந்துவ வசதி , ஆக்கிரமிப்பு, மின்சார வசதி போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு உரிய அரசு ஆணை வழங்கப்படும் எனவும். அடுத்த மாதம் முதல்வர் கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சியில் உத்தரவு வழங்கிடப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

 

கவுந்தப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தில்குமார் பொதுமக்களிடையே மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட கவுன்சிலர் சிவகாமி சரவணன் வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் பவானி வட்டாரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )