பவானி ஜம்பை பேரூராட்சியில் கல்விக் கண் கொடுத்த காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈ.வே.ரா கலந்து கொண்டு இனிப்பு மற்றும் அன்னதானத்தை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள ஜம்பை பேரூராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் செயலாளர் சிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கலந்துகொண்டு 40 ஆண்டுகள் பழமையான காமராஜரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் காமராஜரின் சிறப்புகளைப் பற்றி பொதுமக்களிடையே விளக்கிப் பேசினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் மாநில பொதுக்குழு உறுப்பினர் உதயகுமரன் பவானி வட்டார தலைவர் பூபதி, தலைமைக் கழக பேச்சாளர் சுப்பிரமணியன், ஜம்பை பேரூராட்சி தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
