பவானி நகர அதிமுக சார்பில் 51-ம் ஆண்டு கட்சி துவக்க விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம்,
பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராஜேந்திரன், நகர எம்ஜிஆர் அணிஇணை செயலாளர் எம் ஜி நாத் என்கிற மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் எம் ஜி ஆர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மம்மிடாடி மூர்த்தி, ஆண்டியப்பன், பூக்கடை மாது, காய் கடை மாது, முத்துச்சாமி, பிரகாஷ், பிரபாகரன் மற்றும் 21-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பவித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES ஈரோடு