பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 1200 ஹெக்டேரில் மழை நீர் தேங்கியுள்ளது இரண்டு நாட்களுக்கு பிறகு தான் பயிர் பாதிப்பு தெரிய வரும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் பெய்த கன மழையினால் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் இளம் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதல்வரின் அரசாணையின் படி செப்டம்பர் 1 ம் தேதியே நெல் கொள்முதல் பணி தொடங்கிவிட்டது.
தஞ்சை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு 72 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இன்றைய நிலவரப்படி 43,000 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
70 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கொள்முதல் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்த ஆட்சியர் தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் 1200 ஹெக்டேரில் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
2 நாட்களில் தண்ணீர் வடிந்து விடும் பயிர் பாதிப்பு குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்தார்.