பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம் 2021- 22 ன் கீழ் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி கயத்தார் வட்டாட்சியர் சுப்புலட்சுமி மற்றும் திமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
