BREAKING NEWS

பாளை மாவட்ட மைய நூலகத்தில் ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம்.

பாளை மாவட்ட மைய நூலகத்தில் ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம்.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் மற்றும் தமிழ் எக்கோஸ் ரேடியோ சார்பில் உதவி வனப் பாதுகாவலர் ஹேமலதா எழுதிய ‘காடெனும் வரம்’ நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

நிகழ்விற்கு வாசகர் வட்டத் துணைத்தலைவர் நல்லாசிரியர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கவிஞர் சு.முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 

கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, நல்நூலகர் முனைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா கலந்துகொண்டு வன உயிரின வார விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

 

 

தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் அந்தோணி ராஜ், முத்தமிழ் பப்ளிக் பள்ளி ஆசிரியை கற்பகவல்லி, மாணவி ருத்ரா, என்.பி.என்.கே. கலைப் பண்பாட்டு மன்ற பொறுப்பாளர் சமூக ஆர்வலர் சுரேஷ் அஸ்வின் ஆகியோர் நூலினைத் திறனாய்வு செய்து பேசினர். உதவி வனப்பாதுகாவலர் ஹேமலதா நூலகத்திற்கு 100 புத்தகங்களை வழங்கினார்.

 

நிகழ்வில் திருக்குறள்.முருகன், புலவர் வை.ராமசாமி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன், கவிஞர் சிற்பி பாமா, ஆசிரியர் பாக்கியநாதன், பாக்யராஜ், கவிஞர் சுப்பையா, மருத்துவக்கல்லூரி மாணிக்கவாசகம், பேராசிரியர் ராகுல் கோல்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் இரா. முத்துலட்சுமி நன்றி கூறினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )