பிஜேபியின் கடலூர் மாவட்ட தலைவராக கே.மருதை என்பவர் நியமனம்.

ஸ்ரீமுஷ்ணத்தில் இளம் தொழிலதிபர்
கே.மதுதை பிஜேபி கடலூர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட இளம் தொழில் அதிபர்
கே. மருதை கடலூர் மாவட்ட பிஜேபி தலைவர் ஆனார் கடந்த மூன்று நாளுக்கு முன்பு கடலூரில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையார் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இளம் தொழிலாளர் கே.மதுதை ஒரு வாரத்திற்கு முன்பு கடலூரில் முகாமிட்டு மேடை அமைப்பது தொண்டர்களை திரட்டுவது மற்றும் தொண்டர்களை கட்சியில் இணைப்பது போன்ற பல்வேறு உதவிகளை செய்து வந்தனர்.
இதனை கவனித்த அண்ணாமலையார் இவரது அயராத உழைப்பு கட்சிக்காக உற்சாகமாக செயல்படுவது மேடையிலேயே அண்ணாமலையிடம் வாழ்த்துக்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று மாநில தலைவர் அண்ணாமலையார் நேரடியாக பிரதமர் மோடி கவனித்துக்கொண்டு சென்று நேற்று மாவட்ட தலைவர் என அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் வார்டு உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள்
கே.மருதை அலுவலகத்திற்கு வந்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் காலை சுமார் 10 மணி அளவில் உலக பிரசித்தி பெற்ற தளங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராக சாமி திருக்கோயில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
மூன்றாண்டுக்கு முன்பு வினோஜ் செல்லம் ஸ்ரீமுஷ்ணம் வருகை தந்த போது சுமார் 250 கார்களைக் வேன்கள் 5000 தொண்டர்கள் படை சூழ மேளதாளம் முழங்க இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியே ஜமித்து போனதுசுமார் 70 அடி உயரமுள்ள கொடியேற்றி வினோஜ் செல்வத்தை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த மாவட்ட தலைவர் கே.மருதை என்னை மாவட்ட தலைவராக்கிய அண்ணன் அண்ணாமலையருக்கும் மற்றும் என்னுடன் பயணம் செய்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு இந்த கடலூர் மாவட்டத்தை பிஜேபி கோட்டையாக மாற்றுவேன் என பேட்டி அளித்தார்.