BREAKING NEWS

பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்.

பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம்.

பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு, ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். வைகாசி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், எலுமிச்சை சாறு, அரிசிமா பொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )