பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிட கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை கைவிடவும் விலை உயர்வை மொத்தமாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் யோகா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்கவேண்டும் வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7500 வழங்க வேண்டும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை வேண்டும் நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை கொண்டு வரவேண்டும் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் அனைத்து அரசு துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரிகளை ரத்து செய்து விலை உயர்வுகளையும் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் நீல வானத்து நிலவன் அருண் கவுதம் தளபதி சுந்தர் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
