பெற்றோர்களை இழந்த இரண்டு குடும்பத்திற்கு அழகிய வீட்டை கட்டி கொடுத்ததோடு தானே சென்று குத்து விளக்கு ஏற்றி புத்தாடை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தாய், தந்தை இருவரையும் இழந்து, மன வளர்ச்சி குன்றிய தங்கையோடு தனியாக வசிக்கும் பெண்ணின் கோரிக்கையான..

வீடு ஒன்று வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஏற்றும், இதேபோல் பெற்றோரை இருவரையும் இழந்து வயதான பாட்டியுடன் வசிக்கும் மாணவனின் கோரிக்கையை ஏற்று,

அரசு மற்றும் தொண்டு நிறுவன பங்களிப்புடன் அழகிய இரண்டு புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இன்று கிராம மக்களுடன் நேரில் சென்று குத்துவிளக்கேற்றி, புத்தாடைகளை வழங்கி உறவினர் போல் வாழ்த்திய தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதி சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல் கிராமத்தை நர்சிங் படிப்பு முடித்த இளம் பெண் பாண்டிமீனா என்ற இளம் பெண், தனது மனவளர்ச்சி குன்றிய தங்கையுடன், தனியாக வசிப்பதாகவும், வீடு ஒன்று கட்டி தரவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைத்த நிலையில்,..

கனிவுடன் பரிசிலித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசு மற்றும் தன்விருப்ப நிதியுடன் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உதவியுடன் சுமார் 5.5 லட்சம் செலவில் அழகிய புதிய வீட்டை கட்டி இன்று கிராமமக்களுடன் சென்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து,

புத்தாடைகளை வழங்கி வாழ்த்தினார். இதேபோல் இதனை தொடர்ந்து களத்தூர் கிராமத்தை சேர்ந்த, பெற்றோர் இருவரையும் இழந்து பாட்டியுடன் பழுதடைந்த வீட்டில் வசித்த மாணவன் விஷ்ணுவர்தனின் கோரிக்கையின் படி முதல்வரின் பசுமை வீடு திட்டம் மற்றும் லயன்ஸ் சங்க உதவியுடன் கட்டப்பட்ட புதிய அழகிய வீட்டையும் திறந்து வைத்து மாணவன் மற்றும் அவரது பாட்டிக்கு புத்தாடைகளை வழங்கி வாழ்த்தினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர். சம்பவம் அந்த கிராமத்தில் மற்றும் அந்த குடும்பத்தினர் இல்லையே ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
