BREAKING NEWS

பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்…

பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூரில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம்…

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டு காலம் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸார் வாயில் வெள்ளை வெள்ளை துணி கட்டிக் கொண்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்தார்.


அதன் அடிப்படையில் திருச்சி திருவெறும்பூரில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பேரறிவாளன் விடுதலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான கோவிந்தராஜன் தலைமையில் வாயில் வெள்ளை துணி கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )