பேர்ணாம்பட்டு சின்னத்தாமல் செருவில் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகனின் தில்லுமுல்லு வேலைகள்:

பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்ன தாமல் செருவு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் துரைமுருகன் இவர் இப்பகுதியில் மணல் கடத்தலுக்கு தொடர்ந்து துணை போவதாகவும் சரியாக பணிக்கு வராமல் ஏற்கனவே ஓய்வு பெற்ற சீனிவாசன் என்ற கிராம நிர்வாக அலுவலரை தனது இருக்கையில் அமர்த்தி விட்டு ஊரைச் சுற்ற கிளம்பி விடுகிறார் என்றும்.
கிராம நிர்வாக அலுவலகத்துக்குள்ளையே வி.ஏ.ஓ துரைமுருகன் மணல் கடத்தல் காரர்களுடன் சேர்ந்து கொண்டு மது அருந்துவதாகவும் பேரணாம்பட்டு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளரும் கொத்தபல்லி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான எஸ்.எம்.எல் தலித் அருண் கூறுகிறார்.
மேலும் வி.ஏ.ஓ துரைமுருகன் பணிக்கு சரியாக வரவில்லை என்றும் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் கிராம நிர்வாக அலுவலகம் திறப்பதில்லை என்றும் இவர் தரப்பில் கூறப்படுகிறது எனவே இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வுசெய்து தவறு என தெரியவரும் பட்சத்தில் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக உள்ளது.