BREAKING NEWS

பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.

பேர்ணாம்பட்டு ஹோட்டல்களில் பேக்கரிகளில் ஊசிப்போன தின்பண்டங்கள் விற்பனை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள்.

பேர்ணாம்பட்டு ஜூலை 30 பேரணாம்பட்டியில் ஏராளமான ஓட்டல்களும் ஸ்வீட் கடைகளும் பேக்கரிகளும் செயல்பட்டு வருகிறன. பிளாஸ்டிக் பொருள் என்று சொல்லப்படுகின்ற பாலத்தின் பைகளுக்கு தமிழக அரசு தடை வித்துள்ளது.

 

ஆனால் பேரணாம்பட்டியில் உள்ள அதிக் பிரியாணி ஹோட்டலில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கவர்களின் தான் பிரியாணி களை பொட்டலம் கட்டி விற்பனை செய்கிறார்கள் என்றும் இதே கடையில் நல்லி குழம்பு என்று சொல்லப்படுகிற பாயா குழம்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

ஆனால் மீந்து போன பாயா கொழும்பை மறுநாளிலும் ஒரு விதமான துர்நாற்றத்துடன் கூடிய பாயா குழம்பை விற்பனை செய்கிறார் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது மேலும் பேரணாம்பட்டில் உள்ள பேக்கரிகளிலும் ஸ்வீட் கடைகளிலும் காலாவதியான கெட்டுப் போன தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இதை சாப்பிடும் பொது மக்களுக்கு வாந்தி பேதி வருவதாகவும்,

 

மேற்கண்ட ஹோட்டல்கள் பேக்கரிகள் ஸ்வீட் கடைகள் ஆகியணை நடத்தும் உரிமையாளர்கள் கொடுக்கும் லஞ்சம் பணத்தை பெற்றுக் கொண்டு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.  இது குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரி குபேந்திரன் தலையிட்டு ஊசிப்போன தின்பண்டங்களை விற்பனை செய்யும் ஓட்டல்கள் பேக்கரிகள் ஸ்வீட் கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரணாம்பட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )