BREAKING NEWS

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் காவல்துறையினர் இணைந்து பொதுமக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர்.

 

முதுகுளத்தூர் மட்டும் அதன் சுற்று வட்டார பதற்றமான பகுதிகளிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை சுமுகமாக கையாள வேண்டியும், போதை பொருள்கள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டியும் , சட்ட விரோதமாக போதை பொருள்கள் யாரும் விற்றாலோ, காவல்துறையிடம் பொதுமக்கள் அச்சமின்றி தெரிவிக்கலாம் என்பதை வலியுறுத்தி மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் போலீசார் இன்று விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

 

 

இந்த பேரணி முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக்கன்னு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தளவாய் பிஜுராம், ஆர்.என்.ஆர். யாதவ், ஹரிஹரன், கோபி, ஆகியோரும்,
காவல் ஆய்வாளர்கள் இளவரசு, தங்கமணி, ஜான்சி ராணி, மாரீஸ்வரி,மற்றும் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகிய பங்கேற்றனர்.

 

இந்த பேரணியானது முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக காந்தி சிலையை வந்தடைந்தது. இதில் 100-க்கு மேற்பட்ட மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் போலீசார் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS